Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Wednesday, November 25, 2009

சினிமா பாரடைஸோ - திரைப்பார்வை




இந்த சினிமா பற்றி பலர் அலசி ஆராய்ந்து கட்டுரை, ஆராய்ச்சி என்று பல எழுதி இருப்பார்கள். இருந்தாலும் நாமளும் இந்த படம்லாம் பாத்திருக்கோம்னு எப்புடி வெளிய காட்டிக்கிட முடியும்? இப்படி ஏதாது எழுதுனா தான். அதுல பாருங்க நமக்கு சினிமானாலே கொஞ்சம் பைத்தியம். அதுலயும் சினிமா கொட்டாயை சுத்தி வர்ற கதைனா சும்மாவா? கதை ரொம்ப சின்னது தாம்பா. ரோம்ல இருக்குற ஒரு பிஸியான ஆளுக்கு அவங்க அம்மா ஒரு செய்தி அனுப்புறாங்க. அதாது அவங்க ஊருல அல்ப்ரெடோ அப்படின்னு ஒருத்தர் இறந்து போயிட்டாரு. வந்தா நல்லா இருக்கும். ஹீரோ flashback ல: என்ன மாதிரி ஒரு சினிமாப் பைத்தியம் புடிச்ச ஒரு வாண்டுப்பய அந்த ஊரு சினிமா தேட்டர சுத்தி வர்றான். பையனுக்கு மிஞ்சி போனா 7 இல்ல 8 வயசு தான் இருக்கும். அவன் அங்கனையே வளந்து, வாலிபனாகி, வயசுக்கு வந்து லவுசு விட்டு, கண்ணீர் விட்டு அந்த ஊர விட்டு போய் பெரிய ஆளாகி ஊருக்கு அவன் சின்ன வயசுல அண்ணாந்து பாத்த ப்ரொஜெக்டர் ஓட்டுற கிழவர் துஷ்டிக்கு வரான். என்னடா உலகத்துலேயே சிறந்த இத்தாலிய திரைக்காவியத்த இப்படி சொல்றாநேனு நெனைக்காதீங்க.

படம் பட்டாசா இருக்கு. அந்த சின்ன வயசு பய்யன் அடிக்கிற லூட்டி ஆகட்டும், அந்த பெரியவர் அவன் மேல காட்டுற அன்பு, வாஞ்சை, மணியாட்டி பாதிரியார், கதாநாயகனோட அம்மாவா வர்ற பாட்டி, இப்படி முக்கியமான கதாபாத்திரம் மட்டும் இல்லாம, சின்ன சின்ன பாத்திரங்கள். உதாரணத்துக்கு இந்த ஏரியா மொத்தமும் என்னுது அப்டின்னு சவடால் விடுற மன நிலை சரி இல்லாதவர், பால்கனி சீட்டுல உக்காந்திருக்குற மெதப்புல கீழ எச்சி துப்புர திமிர் புடிச்ச பெருசு, வரிக்கு வரி விடாம வசனத்த ஒப்பிக்கிற அழுவுணி பார்டி, இப்படி சிரிப்பு தோரணம் அங்கங்க.

படம் மொத்தமுமே ஒரு ஜாலியான உணர்வு இருக்கும். தியேட்டர்ல வர்ற காட்சிகள், சின்ன பையனா ஹீரோ அடிக்கிற லூட்டி, பரீட்சை ஹால்ல வர்ற சீன் இப்படி. ஆனால் கிளைமாக்ஸ் நோக்கி போக போக படத்துல ஒரு சோகம் இழையோடும். முக்கியமா அந்த சினிமா தேட்டர குண்டு வச்சி தகர்க்குற காட்சி, அப்பறோம் ஹீரோ அவர் காதலி பேசிக்கிற காட்சி இப்படி. படத்துல முக்கியமான விஷயம் கேமரா வொர்க். படத்துல அங்கனக அது வழுக்கிட்டு போகும். அப்பறோம் நம்ம மணியாட்டி பாதிரி முத்தக்காட்சிய பாத்து வெறியேறி மணியடிக்கறப்போ தேவாலய மணியெல்லாம் அடிக்க அந்த ஊர ஒரு கழுகுப்பார்வாயில காட்டுறது, அப்பறோம் கம்முநிசம் எப்புடி கொஞ்சம் கொஞ்சமா வளருதுன்றதேல்லாம் ரொம்ப நுட்பமா காட்டிருப்பாரு டைரக்டர்.

எல்லாரும் பாத்து ரசிக்க வேண்டிய படம்

Labels: , ,

2 Comments:

Blogger Prasanna said...

கழுதை சாரோட சினிமா விமர்சனமே இவ்வளவு நல்ல இருக்கே, அப்போ படம் எவளோ நல்லா இருக்கும். படம் பார்க்க மிகவும் ஆர்வமா இருக்கேன்.

November 26, 2009 at 2:27 AM  
Blogger Sasirekha said...

unga ezhuthu nadai migavum arumaiya, elimaiya iruku,intha post ennoda personal favourite, thani style supera irukunga :) ***** 5 star rating for your review

November 28, 2009 at 12:21 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home