Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Saturday, January 17, 2009

நினைவுக் கிடங்கு


தாய் தன் வீட்டிலிருந்து
கொணர்ந்த சந்தனக் கும்பா,
அப்பாவின் பார்க்கர் 
பேனா, 
சம்படம், கரண்டி, 
ரப்பர் பந்து,
பீங்கான் தட்டு,
இன்னும் .....இன்னும்
வந்து விழுந்தன 
கிணற்றுக்கு வெளியே.
நான் எறிந்த பொம்மை 
எடுக்க இதே கிணற்றில் 
குதித்த தங்கையின்
நினைவுகளை மட்டும்
தூர் வார முடியவில்லை.

Labels: , , , ,

1 Comments:

Blogger Vicky said...

உறவுகள் கண்ணாடி போல் உடைந்து ஒஅடிநாலும் அதன் நினைவுகள் வைரம் போல் கடுமையாக நெஞ்சுக்குள் சிக்கி தவிகின்றன .....உறவுகள் வைரம் போலவும் நினைவுகள் கண்ணாடி போலவும் மாற நெஞ்சம் ஏங்குகின்றது ......

January 19, 2009 9:31 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home